English Grammar Basics in Tamil – 3 Easy Steps

இந்த வகுப்பை தொடர்ந்து நாம் ( English Grammar ) ஆங்கில இலக்கணத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம். English Grammar Basics in Tamil பொதுவாக ஆங்கில இலக்கணம் என்பது நம் தமிழ் இலக்கணத்தை விட மிக எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று.
ஆங்கில இலக்கணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் ஆங்கில எழுத்துக்களை (English Alphabets) தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழில் உள்ள எழுத்துக்கள் எப்படியோ அப்படியே ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களும் முறைப்படி தெரிந்து கொள்ள வேண்டும்.

English Grammar Basics in Tamil

Tamil Letters

  • தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12
  • அ , ஆ , இ , ஈ , உ , ஊ , எ , ஏ , ஐ , ஒ , ஓ , ஔ ,
  • தமிழில் உள்ள மெய் எழுத்துக்கள் மொத்தம் 18
  • க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
  • 12 உயிர் எழுத்துக்களும் 18 மெய் எழுத்துக்களும் சேர்ந்து உருவாகுவதே உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 216.ஆயுத எழுத்து 1
  • இவையே தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247

தமிழில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை விட ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு இதனால் தான் ஆங்கிலத்தை அனைவரும் எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது. மேலே உள்ளவாறு தமிழில் எப்படி நாம் உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் என பிரித்தோமோ அப்படி ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களையும் பிரிக்கலாம்.

English Grammar Basics in Tamil

English Letters

  • ஆங்கிலத்தில் உள்ள உயிர் எழுத்துக்கள் (Vowels) 5
  • A , E , I , O , U
  • ஆங்கிலத்தில் உள்ள மெய்யெழுத்துக்கள்(Consonants) 21
  • B , C , D , F , G , H , J , K , L , M , N , P , Q , R , S , T , V , W , X , Y , Z 
  • ஆங்கிலத்தில் உள்ள மொத்த எழுத்துக்கள் 26

Letters Types ( English Grammar Basics in Tamil )

  • கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) அதாவது அச்சு எழுத்துக்கள் என்றும் இவற்றை அழைக்கப்படும் அதாவது நாம் புத்தகத்திலோ அல்லது மற்ற ஆவணங்களில் அச்சிடுவதற்காக பயன்படுத்தும் எழுத்து கேப்பிட்டல் லெட்டர்ஸ் என்று அழைக்கப்படும்.
  • ஸ்மால் லெட்டர்ஸ் (Small letters) இதுவும் அச்சு எழுத்துக்கள் என்றும் இவற்றை அழைக்கப்படும் அதாவது நாம் புத்தகத்திலோ அல்லது மற்ற ஆவணங்களில் அச்சிடுவதற்காக பயன்படுத்தும் எழுத்து ஸ்மால் லெட்டர்ஸ் என்று அழைக்கப்படும்.
  • ஸ்க்ரிப்ட்  லெட்டர்ஸ் (Script Letters) அதாவது இவற்றை எதற்காக பயன்படுத்துகிறோம் என்றால் நாம் எழுதும் எழுத்துக்களை ஸ்கிரிப் லேட்டஸ்ட் என்றும் அழைக்கப்படும் அதாவது நாம் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்றால் ஸ்கிரிப் லெட்டர் முறைப்படி தெரிந்து கொண்டு எழுதினால் ஆங்கிலத்தில் நம் கையெழுத்தும் அழகாக இருக்கும்.

For Example ( English Grammar Basics in Tamil )

இப்பொழுது கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) எப்படி பயன்படுத்துவது எங்கு பயன்படுத்துவது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆங்கில இலக்கணத்தை ( English Grammar Basics in Tamil ) முறைப்படி எழுத வேண்டும் என்றால் நாம் எழுதும் வார்த்தையில் எங்கெங்கு நாம் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) பயன்படுத்த வேண்டும் என்பதை முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters)  எங்கு பயன்படுத்த வேண்டும் என்றால்  ஒரு வாக்கியத்தின் முதல் எழுத்து கேப்பிட்டல் லெட்டரில் தான் இருக்க வேண்டும். ஒரு வாக்கியம் முடிவு பெற்று முற்றுப்புள்ளி வைத்த பின்பு அடுத்த வாக்கியம் தொடங்கும் பொழுது அந்த வாக்கியத்தின் முதல் எழுத்தும் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) இல் தான் இருக்க வேண்டும்.

  • How are you – (நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.)
  • I like you – (நான் உன்னை விரும்புகிறேன்.)
  • Where are you – (எங்கே இருக்கிறீர்கள்.)
  • When are you going to Chennai – (எப்போ சென்னைக்கு போறீங்க.)
  • மேலே உள்ள இந்த நான்கு தனித்தனி வாக்கியங்களை பாருங்கள் இவற்றை முதலில் நாம் ஆரம்பிக்கும் எழுத்து கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் இருக்கிறது.
  • ”He come to Chennai. He Wanted to visit Chennai Marina Beach” – (சென்னைக்கு வருகிறார். சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல விரும்பினார்)
  • இதற்கு மேலே உள்ள வாக்கியத்தை பாருங்கள் அதாவது இதில் இரண்டு வாக்கியங்கள் தொடர்ந்து வருகிறது முதல் வாக்கியத்தில் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் ஆரம்பிக்கிறது அதேபோல அவை முற்றுப்புள்ளி வைத்து முடிவு செய்ததும் இரண்டாவது வாக்கியம் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் ஆரம்பிக்கப்படும்.
  • மனிதர்களின் பெயர் 
  • ஊர்களின் பெயர் 
  • ஆறுகளின் பெயர் 
  • மலைகளின் பெயர் 
  • நாடுகளின் பெயர் 
  • கண்டங்களின் பெயர் 
  • கடல்களின் பெயர் 
  • இடத்தின் பெயர் 
  • பொருளின் பெயர்
  • போன்றவற்றை எல்லாம் நாம் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் ஆரம்பிக்க வேண்டும்.
  • They tell me I walked the day I was a year old. – (எனக்கு ஒரு வயது ஆன நாளில் நான் நடந்தேன் என்று சொல்கிறார்கள்.)
  • I என்ற இந்த ஒரு வார்த்தை மட்டும் ஒரு வாக்கியத்தில் தனித்து நின்றால் அவை கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் I என்றால் நான் என்று பொருள் உதாரணமாக I ஒரு வாக்கியத்தின் இடையிலோ கடையிலோ முடிவிலோ எங்கு வந்தாலும் அவை கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் இருக்க வேண்டும்.
  • He says “Be careful” – (கவனமாக இரு என்கிறார்.)
  • மேலே உள்ள வாக்கியத்தை பாருங்கள் அந்த வாக்கியத்தில் இதுபோன்று மேற்குறிகளுடன் எழுத வேண்டும் என்றால் அவற்றை கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் எழுத வேண்டும்.
  • Wonderful.! – (அற்புதம்)
  • Delicious.! – (சுவையானது)
  • Superb.! – (சூப்பர்)
  • Fantastic.! – (அருமையான)
  • Oh God.! – (அட கடவுளே)
  • உங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும்கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் இருக்க வேண்டும் மேலே உள்ள வார்த்தைகள் அனைத்தும் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக கருதப்படுகிறது.
  • B.Com.,
  • M.Com.,
  • B.Sc.,
  • M.Sc.,
  • TNPSC
  • TNEB
  • உங்களுடைய பட்டப் படிப்புகளுக்கு வழங்கப்படும் பெயர்களை கூட நாம் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் எழுத வேண்டும் அது மட்டும் அல்லாமல் சுருக்கமாக அழைக்கப்படும் பெயர்களுக்கு கூட நாம் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் எழுத வேண்டும் இதற்கான உதாரணம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது..
  • “Opportunity is not what we are looking for,
  • It is what we are looking for”
  • நாம் சில கவிதைகள் எழுத வேண்டுமென்றால் கூட ஒவ்வொரு வாக்கியத்தின் ஆரம்பத்தில் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் ஆரம்பிக்க வேண்டும்.
  • Lord Ganesh
  • God Muruga
  • Lord Shiva
  • மேலும் நாம் வணங்கக்கூடிய கடவுள்களை குறிப்பிடும் பெயர்களை கூட முதலில் கேப்பிட்டல் லெட்டர்ஸ் (Capital Letters) தான் ஆரம்பிக்க வேண்டும்.
  • இந்த கேப்பிட்டல் லெட்டர் எங்கெங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த வகுப்பில் ஆங்கில இலக்கணத்தின் ( English Grammar ) வகைகளை (Parts of Speech) பற்றி பார்ப்போம்.

எங்கள் இலக்கம்: உங்களை ஊக்குவித்து, உங்கள் எண்ணங்களை நேர்மறையாக மாற்றி, ayypal.com வெற்றியை நோக்கி உங்களை முன்னேற்றுவது! நீங்கள் உங்கள் கனவுகளை நோக்கி பயணிக்க, தைரியம் தேவைப்பட்டால், எங்கள் சேனல் உங்கள் அருகிலிருக்கும் உறுதியான ஆதரவு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top